திருவாசகச் சிறப்பு
தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல்அறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே-எல்லை
மறுவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகம்என்னும் தேன்.
1
திருவா சகமென்னுந் தேன்பருகித் தேசமெல்லாம்
கருவே ரறுத்தருளிக் கருங்கடலை வேர்துளைத்திட்
டுருவா சகமென்னு முண்மையுணர்ந் துத்தமனார்
திருவா சகமென்னுந் தேனினருட் காரணமே.
2
கண்மதகு மென்புளகக் காடும் படைத்தோனும்
வண்மையருள் மாணிக்க வாசகனு-முண்மையினில்
ஆனந்த மாவானுந் தன்னொழிவு காணானும்
ஆனந்த வாதவூ ரன்.
3
திருச்சிற்றம்பலம்

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com